Showing posts with label பெண் குழந்தை. Show all posts
Showing posts with label பெண் குழந்தை. Show all posts

Thursday, April 8, 2010

நடிகர் ஷாமுக்கு 2வது பெண் குழந்தை பிறந்தது

நடிகர் ஷாம் - கஷீஸ் தம்பதியருக்கு பெங்களூருவில் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கிக் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தில்லாலங்கடி படத்தின் ‌ஜெயம் ரவியுடன் நடித்து வரும் ஷாமின் மனைவி கஷீஸ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று பெங்களூருவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஷாம் - கஷீஸ் தம்பதியருக்கு ஏற்கனவே ஸமைரா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவத்துக்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.