Showing posts with label Rambha. Show all posts
Showing posts with label Rambha. Show all posts

Thursday, April 8, 2010

ரம்பா கழுத்தில் தாலி கட்டினார் இந்திரன்

நடிகை ரம்பா - தொழிலதிபர் இந்திரன் திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனக்கு திருமணம் கைகூடினால் திருப்பதியில் வைத்து திருமணத்தை நடத்துவதாக ரம்பா, ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டிருந்தாராம். அதன்படி ரம்பா - இந்திரன் திருமணம் திருப்பதியில் நடந்‌தது. ரம்பா காலை 11 மணியளவில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநிற பட்டுப்புடவை கட்டியபடி மணமேடைக்கு வந்தார். மணமகன் பட்டு வேஷ்டி - சட்டை அணிந்து மணமேடையில் இருந்தார். அப்போது நடிகை ரம்பாவின் கையை அவரது தந்தை வெங்கடேஸ்வரராவ் பிடித்து, மணமகன் இந்திரகுமாரிடம் ஒப்படைத்தார். ரம்பாவின் தாய் உஷாராணி அருகில் இருந்தார். அதைத்தொடர்ந்து ரம்பா, மணமகனுக்கு பாதபூஜை செய்து, காலை தொட்டு கும்பிட்டார். மதியம் 12.30 மணியளவில் ரம்பா கழுத்தில் இந்திரன் தாலி கட்டினார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர்.

‌கோலாகலமாக இதில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நடிகை ரோஜா, டைரக்டர் செல்வமணி, கலா மாஸ்டர், தெலுங்கு டைரக்டர் ராகவேந்திர ராவ் உள்ளிட்‌டோர் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட ரம்பா, பின்னர் ஏழுமலையானை தரிசித்தார்.

நடிகை ரம்பா - இந்திரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11ம்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
rambha wedding reception stills, rambha wedding pictures, tamil actress rambha marriage photos, rambha marriage engagement, ramba wedding photos, tamil actress ramba wedding photos, actress rambha wedding pics, rambha wedding reception images, rambha wedding reception wallpapers
Ramba Wedding Photos, Rambha Wedding Pictures, Rambha Marriage Photos

RAMBHA CLARIFIES ON HER WEDDING

Rambha is preparing to tie the knot with Canada-based businessman Indra Kumar at a traditional wedding ceremony that is due to take place in Tirupati on April 8th, 2010. The reception will be held at the Rani Meyyammai Hall in Chennai at a later date. The entire film fraternity is expected to attend the reception though the wedding is for close family and friends.

Speaking about her marriage, Rambha says that it is an arranged marriage. She clarified that she was signed up as a brand ambassador for Indra Kumar’s company but eventually he asked for her hand in marriage through a formal request to the elders in the family. Rambha says that she will continue to act even after her marriage.