Showing posts with label complaint. Show all posts
Showing posts with label complaint. Show all posts

Thursday, April 8, 2010

இளையராஜா புகார்! சி.டி., கடையில் ரெய்டு!!

இசையமைப்பளார் இளையராஜா கொடுத்த புகாரின்பேரில் சென்னையில் சி.டி., கடைகளில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினார்கள். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றையும் கொடுத்திருந்தார். தான் இசையமைத்த சினிமா பாடல்களின் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள் வெளியிட்டது தொடர்பாக தனக்கு கொடுக்க வேண்டிய ராயல்டி தொகையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் கொடுக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரை வழக்காக பதிவு செய்த போலீசார், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவி.எம். மியூசிக் சோன், சரஸ்வதி ஸ்டோர் ஆகிய கடைகளில் ‌திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு அனுமதி பெறாமல் இருந்த 179 சினிமா பாடல் சி.டி.,க்களை பறிமுதல் செய்திருப்பதாக கூறிய குற்றப்பிரிவு போலீசார், கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடத்தவிருப்பதாக கூறியுள்ளனர்.